Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித்...?

மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித்...?
, ஞாயிறு, 19 ஜனவரி 2014 (11:21 IST)
அஜித்தின் மாஸ் இமேஜ் அப்படியே திரையில் பிரதிபலித்து கரன்சிகளை அள்ளிக் கொண்டிருக்கிறது வீரம். திரையிட்ட அனைத்து இடங்களிலும் ஏ, பி, சி என்ற பாகுபாடில்லாமல் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
FILE

ஹிட் கொடுத்த இயக்குனருடன் மீண்டும் இணைந்து படம் பண்ண எந்த நடிகருக்கும் ஆசை இருக்கும். அஜித்துக்கும் அப்படியே. வீரம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை அஜித்துக்கு இருந்தாலும் இப்படியொரு வெற்றியை அஜித்தே எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

அதனால் சிவாவுடன் மேலுமொரு படம் செய்ய அஜித் விரும்புவதாக கூறப்படுகிறது. தனது விருப்பத்தை அவர் சிவாவிடமும் தெரிவித்துள்ளார்.
webdunia
FILE

சிறுத்தை படத்தின் மூலம் தமிழுக்கு வந்த சிவா கார்த்தியை வைத்து சிறுத்தை இரண்டாம் பாகத்தை இயக்கவிருப்பதாகவும் ஒரு தகவல் உள்ளது. அதேநேரம் வீரம் ஹிட்டுக்குப் பிறகு தெலுங்கில் உள்ள முன்னணி நடிகர்களும் சிவாவின் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளனர்.

சிவா என்ன முடிவை எடுக்கிhர் என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil