Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துப்பாக்கியைத் தாண்டிய ஜில்லா

துப்பாக்கியைத் தாண்டிய ஜில்லா
, புதன், 15 ஜனவரி 2014 (16:20 IST)
பொங்கலை முன்னிட்டு வெளியான 'ஜில்லா' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், மற்றும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களை அழைத்து வெற்றி விழாவாக கொண்டாட விரும்பினார் இளைய தளபதி விஜய்.
FILE

அதன்படி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில், தயாரிப்பாளர் ஆர்.பி.சொளத்ரி, இயக்குனர் நேசன், இசையமைப்பாளர் டி.இமான், நடிகர் சூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், வந்திருந்த விநியோகஸ்தர்கள் சமீபத்தில் வெளியான துப்பாக்கி படத்தையும் தாண்டி 'ஜில்லா' வசூலில் சாதனை படைத்திருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினார்கள். இதைவிட இன்னும் பிரம்மாண்டமான விழாவை 'ஜில்லா' நூறாவது நாள் விழாவாக ரசிகர்களுடன் கொண்டாடவும் திட்டம் வைத்திருக்கிறார் விஜய்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil