Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவில் போலிகள் பெருத்து விட்டனர் - ஏ.ஆர். முருகதாஸ் பரபரப்பு பேச்சு!

Webdunia
புதன், 15 ஜனவரி 2014 (14:25 IST)
எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் வெளியிடும் படம் நேர் எதிர். ரிச்சர்ட், பார்த்தி, ஐஸ்வர்யா நடித்து ஜெய்பிரதீப் இயக்கீய இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
FILE

படத்தின் டிரைலரை பி.வாசு தலைமையில், ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட, கவுதம் வாசுதேவ் மேனன் பெற்றுக்கொண்டார். எஸ்.தாணு வரவேற்று பேசினார். இந்த படத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தில் ஒருபகுதியை நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு கொடுத்து உதவ இருப்பதாக அவர் கூறினார்.

விழாவில் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியதாவது:

FILE
ஒரு படத்துக்கு தலைப்பு அமைவது, மிகவும் சிரமம். ‘நேர் எதிர்’ என்ற தலைப்பு அனைத்து தரப்பினரையும் கவர்கிற தலைப்பு. எனக்கு தோன்றாமல் போய்விட்டது. நான், அடுத்து விஜய் படத்தை இயக்கப் போகிறேன். கதை எல்லாம் தயாராகி விட்டது. படப்பிடிப்புக்கு போகப்போகிறோம். ஆனால், தலைப்பு முடிவாகவில்லை.

நான் இயக்கிய ‘துப்பாக்கி’ படத்தில், முதல் தோட்டா தயாரிப்பாளர் தாணு. தயாரிப்பாளர்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று அம்மா மாதிரி. இன்னொன்ரு அப்பா மாதிரி. அம்மா மாதிரி உள்ளவர்கள், பிள்ளையை வயிற்றில் சுமப்பதில் இருந்து கடைசி வரை அதைப்பார்த்துக் கொள்கிற மாதிரி, படம் உருவாகிறபோது உடன் இருந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வார்கள்.

அப்பா மாதிரி இருப்பவர்கள் படத்தின் தொடக்க விழாவுக்கு வருவார்கள். இடையில் டாக்டரிடம் அழைத்து செல்வது, பிரசவம் ஆனதும் இனிப்பு கொடுப்பது போல் இருப்பார்கள். தாணு, அம்மா மாதிரியான தயாரிப்பாளர். ‘துப்பாக்கி’ படத்துக்கு வந்த பிரச்சினைகளை எல்லாம் சமாளித்து வெற்றி கண்டவர்.

இப்போதெல்லாம் ஒரு படம் ஓடினால் கூட, அந்த படக்குழுவினர் சந்தித்துக் கொள்வதில்லை. ஒருவரையொருவர் பார்ப்பதே இல்லை. சினிமாவில் இப்போது நல்ல நட்பு, நல்ல உறவு, நன்றியுணர்வு ஆகியவை குறைந்து விட்டன. போலிகள் அதிகமாகி விட்டார்கள். சினிமாவில், உண்மையான மனிதர்கள் கிடைப்பது அரிதாக இருக்கிறது.

என்றார் முருகதாஸ்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments