Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நோ கண்டிஷன்ஸ் அப்ளைட்

நோ கண்டிஷன்ஸ் அப்ளைட்
, வியாழன், 9 ஜனவரி 2014 (17:22 IST)
ரம்யா நம்பீஸன் மீது ஒரு கற்பனை குற்றச்சாட்டு சமீபமாக முளைத்திருக்கிறது. நடிக்க கால்ஷீட் கேட்டால் பாடுவதற்கு வாய்ப்பு கேட்கிறார்.

டமால் டுமீல் பிரஸ்மீட்டில் முகத்துக்ககு நேராகவே இந்த கேள்வி வைக்கப்பட்டது. சீ‌ரியஸான கேள்வியை சி‌ரித்துக் கொண்டே எதிர்கொண்டார் ரம்யா.
FILE

என்னிடம் கால்ஷீட் கேட்டு வருகிறவர்களிடம் பாடுவதற்கு வாய்ப்பு தர வேண்டும் என்று நான் கண்டிஷன் எதுவும் போடுவதில்லை. மலையாளத்திலும், தமிழிலும் நான் பாடிய பாடல்கள் ஹிட்டானதால் அவர்களாகவே பாடுவதற்கு வாய்ப்பு தருகிறார்கள் என்றார்.

பீட்சா படத்தைத் தொடர்ந்து ஸ்ரீ இயக்கியிருக்கும் இந்த டமால் டுமீலிலும் ரம்யா நம்பீஸன் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அதுதான் இந்தக் கேள்வி.

டமால் டுமீல் ப்ளாக் காமெடி ஜான‌ரில் தயாராகியிருக்கிறது. வைபவ் ஹீரோ. ஸ்ரீ என்பவர் இயக்க சி.ஜெ.ஜெயக்குமார் படத்தை தயா‌ரித்துள்ளார். பீட்சாவுக்குப் பிறகு மலையாளத்தில் பிஸியாகிவிட்ட ரம்யாவிடம் தொலைபேசியில் டமால் டுமீல் கதையை ஸ்ரீ கூறியிருக்கிறார். அதன் ப்ளாக் காமெடி ஜானர் பிடித்துப் போனதால் உடனே நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் ரம்யா.

இந்தத் தகவலையும் பிரஸ்மீட்டில் ரம்யாவே தெ‌ரிவித்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil