Webdunia - Bharat's app for daily news and videos

Install App

600 திரையரங்குகளில் ஜில்லா - ஆர்.பி.சௌத்ரி

Webdunia
வியாழன், 9 ஜனவரி 2014 (11:07 IST)
தமிழகத்தில் 600 திரையரங்குகளில் ஜில்லா படத்தை திரையிடயிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத ்ரி தெரிவித்தார்.
FILE

ஜில்லா படத்தின் மீதான எதிர்பார்ப்பை சிந்தாமல் சிதறாமல் கடைசி ரசிகன்வரை கொண்டு சேர்க்கும் விஷயத்தில் கருத்தாக இருக்கிறார் ஆர்.பி.சௌத ்ரி. கடைசிநேர விளம்பரமாக நேற்று ஜில்லா குறித்து பத்த ிர ிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

சௌத ்ர ியின் ச ூப்பர்குட் ஃபிலிம்ஸுக்கும், விஜய்க்கும் ஒரு ராசி உண்டு. ச ூப்பர்குட் ஃபிலிம்ஸ் தய ார ிப்பில் விஜய் நடித்த பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி, ஷாஜகான் என எல்லா படங்களும் வெள்ளிவிழா கண்டன. ஜில்லா இவர்கள் இணையும் ஆறாவது படம். மற்ற படங்களைவிட ஜில்லா மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றார் சௌத ்ரி.

மோகன்லால் நடிப்பில் ச ூப்பர்குட் ஃபிலிம்ஸ் அரண் என்ற படத்தை தய ார ித்தது நினைவிருக்கலாம். மலையாளத்தில் இப்படம் கீர்த்தி சக்ரா என்ற பெயரில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. ஜில்லா மேகன்லால், ச ூப்பர்குட் ஃபிலிம்ஸின் இரண்டாவது படம்.

படத்தின் மீதான நம்பிக்கை காரணமாக சம்பளம் வாங்காமல் படத்தின் கேரள உர ிமையை மோகன்லால் வாங்கிக் கொண்டதாக சௌத ்ரி தெரிவித்தார். அங்கு 300 திரையரங்குகளில் படம் வெளியாகிறது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் 250 திரையரங்குகள். ஆக, 1200 க்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியாகிறது.

ஜில்லா வெளியாகும் இந்த ஆண்டு ச ூப்பர்குட் ஃபிலிம்ஸின் வெள்ளிவிழா வருடம் என்ற தகவலையும் சௌத ்ரி கிர்ந்து கொண்டார்.


வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments