Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹிந்திக்காக மீண்டும் திருநங்கையாகும் சரத்குமார்

ஹிந்திக்காக மீண்டும் திருநங்கையாகும் சரத்குமார்
, புதன், 8 ஜனவரி 2014 (19:51 IST)
FILE
ஹிந்தியில் தயாராகும் காஞ்சனா ரீமேக்குக்காக மீண்டும் திருநங்கையாக நடிக்கிறார் சரத்குமார். ராகவா லாரன்ஸே ஹிந்தி ரீமேக்கையும் இயக்குகிறார்.

காஞ்சனா வெளியாகும் முன்பே ஹிந்தியில் இதனை ‌ரீமேக் செய்ய கேட்கிறார்கள் என ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார். அன்று அவ‌ரின் பேச்சு காஞ்சனா படத்துக்கு அவர் வலிந்து செய்யும் பில்டப்பாக தோன்றியது. ஆனால் படம் வெளியாகி தமிழ், தெலுங்கில் மாபெரும் வெற்றியை பெற்று, சந்தேகத்தை துடைத்தெறிந்தது. தற்போது முனி 3 - கங்கா என்ற பெய‌ரில் காஞ்சனாவின் சீக்வெலை தமிழ், தெலுங்கில் லாரன்ஸ் இயக்கி நடித்து வருகிறார்.

அதேநேரம் காஞ்சனாவின் ஹிந்தி ‌‌ரீமேக்கை இயக்கும் வாய்ப்பும் அவரை தேடி வந்துள்ளது. துஷார் கபூர் தயா‌ரிக்கும் இந்த ‌‌ரீமேக்கில் லாரன்ஸ் நடித்த வேடத்தில் அஜய் தேவ்கான் நடிக்கிறார். சவாலாக இருப்பது சரத்குமார் நடித்திருந்த திருநங்கை வேடம். காஞ்சனா படத்தின் ஆன்மாவே இந்த திருநங்கை கதாபாத்திரம்தான். தமிழில் அதனை அட்டகாசமாக செய்திருந்தார் சரத்குமார். ஹிந்தியிலும் சரத்குமார் போன்ற முன்னணி நடிகர் நடித்தால்தான் அந்த கதாபாத்திரம் எடுபடும்.

ஆனால் இமே‌ஜ் பயத்தில் திருநங்கையாக நடிக்க யாரும் முன் வரவில்லை. அதனால் சரத்குமாரையே ஹிந்தியிலும் திருநங்கை வேடத்தில் நடிக்க வைப்பது என முடிவு செய்துள்ளனர். சரத்குமாருக்கு இது ஹிந்தியில் முதல் படம் என்பதால் அவரும் அந்த வேடத்துக்காக தன்னை மெருகெற்றி வருகிறார்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Share this Story:

Follow Webdunia tamil