Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜோஷி படம் - மோகன்லாலுடன் மோதும் சத்யரா‌ஜ்

ஜோஷி படம் - மோகன்லாலுடன் மோதும் சத்யரா‌ஜ்
, புதன், 8 ஜனவரி 2014 (18:58 IST)
FILE
ஜோஷி மலையாளத்தின் டோனி ஸ்காட். க்ரைம் பின்னணியில் படம் இயக்குவதில் கில்லாடி. 1988ல் இவரது இயக்கத்தில் வெளிவந்த நியூ டெல்லி திரைப்படம் இன்னும் மலையாள சினிமாவின் முக்கியமான ஆக்சன் படமாக கருதப்படுகிறது.

2012ல் மோகன்லால், அமலா பால் நடிப்பில் ரன் பேபி ரன் என்ற படத்தை இயக்கினார். அமலா பாலுக்கு தொலைக்காட்சி நிருபர் வேடம். மோகன்லால் ஒளிப்பதிவாளர். சேனல்களுக்கடையேயான போட்டி, ஸ்டிங் ஆபரேஷன், ஊழல் அரசியல்வாதி என்று ஜோஷிக்கு பிடித்த ஏ‌ரியா.

2014ல் லைலா ஓ லைலா என்ற படத்தை இதே ஜோடியை வைத்து இயக்குகிறார் ஜோஷி. இந்தப் படத்தில் சத்யராஜும் நடிக்கிறார். ஜோஷி சொல்வதைப் பார்த்தால் படத்தின் பவர்ஃபுல் வில்லனாக சத்யரா‌ஜ் இருப்பார் போலிருக்கிறது.

தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் நடிக்க மாட்டேன் என்று சொல்லி வந்த சத்யரா‌ஜ் தமிழில் படம் குறைந்த பிறகு ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என்று கலந்துகட்டி அடிக்கிறார். மொழி இப்போது பிரச்சனையில்லை. ஏற்கனவே கமல் இயக்கத்தில் ஒரு படம் சத்யரா‌ஜ் நடித்திருக்கிறார் ஜோஷி படம் இரண்டாவது.

கலக்குங்க புரட்சி தமிழன்.

Share this Story:

Follow Webdunia tamil