சமீபத்தில் தனது சமூகவலைத்தளத்தில் விஜய்யுடன் இருப்பதாகவும், பொழுது ஜாலியாக கழிவதாகவும் செய்தி போட்டிருந்தார் தனுஷ். ரசிகர்கள் உஷார். அப்படியானால் விஜய்யை ஒரு ஹாய் சொல்லச் சொல்லுங்கள் என எதிர் கமெண்ட் போட்டனர். சற்று நேரத்துக்கெல்லாம் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றினார் தனுஷ். விஜய் ரசிகர்களுக்கு பயங்கர மகிழ்ச்சி. அஜீத்துக்கு சிம்பு என்றால் எங்களுக்கு தனுஷ்.
தலைவா பிரச்சனையின் போது விஜய்க்கு ஆதரவாக தனுஷ் கருத்து தெரிவித்திருந்தார். இப்போது இருவரும் ஒன்றாக ஜாலியாக பொழுது போக்குகிறார்கள். அதிகார மையம் ஆப்பு தயாரிக்கையில் தனுஷுக்கும் ஒன்று கன்ஃபார்ம்.