Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்ருதிஹாசனுக்கு அறுவை சிகிச்சை

ஸ்ருதிஹாசனுக்கு அறுவை சிகிச்சை
, செவ்வாய், 7 ஜனவரி 2014 (19:56 IST)
FILE
வியிற்று வலியால் அவதிப்பட்ட ஸ்ருதிஹாசன் ஹைதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

தற்போது இரண்டு தெலுங்குப் படங்களில் ஸ்ருதி நடித்து வருகிறார். அதில் ராம் சரண் தேஜாவுடன் நடித்திருக்கும் யவடு ‌ரிலீஸுக்கு தயாராக உள்ளது. அதன் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் ஸ்ருதி பங்கேற்று வந்தார். அதேபோல் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடிக்கும் ரேஸ் குர்ரம் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார்.

இந்நிலையில் அவர் வயிற்று வலியால் அவதிப்பட உடனடியாக ஹைதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஃபுட் பாய்சன் காரணமாக அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக முதலில் செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் அவருக்கு அப்பண்டிசைடிஸ் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டதாக ஹைதராபாத்திலிருந்து வரும் செய்திகள் தெ‌ரிவிக்கின்றன. மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் விரைவில் குணமடைய தனக்கு வாழ்த்து சொன்னவர்களுக்கு ஸ்ருதி நன்றியும் தெ‌ரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil