Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அண்ணாவின் வேலைக்கா‌ரியில் நடித்த லட்சுமிகாந்தம் காலமானார்

அண்ணாவின் வேலைக்கா‌ரியில் நடித்த லட்சுமிகாந்தம் காலமானார்
, திங்கள், 6 ஜனவரி 2014 (13:57 IST)
FILE
அண்ணாவின் வேலைக்கா‌ரி படத்தில் நடித்த பழம்பெரும் நடிகை லட்சுமிகாந்தம் நேற்றுமுன் தினம் காலமானார். அவருக்கு வயது 93.

லட்சுமிகாந்தம் எம்.‌ஜி.ஆர்., சிவா‌ஜி காலத்தவர். அவர்களின் அலிபாபாவும் 40 திருடர்களும், நான் பெற்ற செல்வம் உள்பட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

லட்சுமிகாந்தம் சென்னை வேளச்சே‌ரியை சேர்ந்தவர். கடந்த இருபது ஆண்டுகளாக புதுவை வில்லியனூர் இமாகுலேட் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தார். சில வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று முன்தினம் - சனிக்கிழமை காலமானார்.

அவரது உடல் வில்லியனூரில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil