Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேகமாக வளர்ந்துவரும் அதிதி

வேகமாக வளர்ந்துவரும் அதிதி
, சனி, 4 ஜனவரி 2014 (15:34 IST)
நந்தா, அனன்யா நடிக்கும் அதிதி படத்தின் சண்டைக் காட்சி ஒன்று சமீபத்தில் சென்னையில் படமாக்கப்பட்டது. நந்தா, அனன்யா இருவரும் இந்தக் காட்சியில் நடித்தனர்.
FILE

அதிதியை பரதன் இயக்குகிறார். இவர் அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கியவர். இந்தமுறை நேரடி தமிழ்ப் படத்தை இயக்காமல் மலையாளத்தில் வெளியான காக்டெய்ல் படத்தின் உ‌ரிமையை வாங்கி அதிதி என்ற பெய‌ரில் ‌ரீமேக் செய்கிறார் (காக்டெய்ல் படம் கனடா தயா‌ரிப்பான பட்டர்ஃபிளை ஆன் ஏ வீல் படத்தின் தழுவல்).

தனது மனைவியுடன் கள்ள உறவில் ஈடுபடுகிறவனையும், அவனது மனைவியையும் பாதிக்கப்பட்டவன் வித்தியாசமான முறையில் பழி வாங்குவதுதான் காக்டெய்ல் படத்தின் ஒன் லைன். கனடா படத்தை இந்திய சூழலுக்கு எடுத்திருந்தனர்.

நந்தா, அனன்யா இருவரையும் மர்ம கும்பல் ஒன்று கொலை செய்ய துரத்துவது போன்ற காட்சியை சமீபத்தில் பரதன் சென்னையில் எடுத்தார். இந்தப் படத்தில் இவர்களுடன் நிகேஷ்ராம், பாடகர் பிரசன்னா ஆகியோரும் நடிக்கிறார்கள். பரத்வா‌ஜ் இசையமைக்கிறார்.

ஸ்பெல் பௌண்ட் ஃபிலிம்ஸ் ஐஎன்சி என்ற நிறுவனம் படத்தை தயா‌ரிக்கிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil