Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கௌதம் படம், அஜீத் ஜோடி அனுஷ்கா...?

Webdunia
சனி, 4 ஜனவரி 2014 (12:03 IST)
இப்போதைக்கு கேள்விக்குறியாக இருந்தாலும் விரைவில் ஆச்சரியக்குறியாக மாறுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது. ஆம், கௌதம் இயக்கும் படத்தில் அஜீத் ஜ ோடியாக நடிக்க அனுஷ்காவின் பெயர் பரிசீலனையில் உள்ளது.
FILE

கௌதம் சிம்புவை வைத்து இயக்கி வரும் படத்தின் டாக்கி போர்ஷன் இந்த மாதத்துடன் முடிவடையும் நிலையில் உள்ளது. போஸ்ட் புரொடக்ஷனும் முடிந்தால் படம் தயாராகிவிடும். அதையடுத்து அஜீத் நடிக்கும் படத்தை கௌதம் இயக்குகிறார்.

இந்தப் படத்தில் யார் ஹீரோயின்? கௌதம் பட ஹீரோயின் எக்ஸ்ட்ரா அழகுடன் தெரிவார்கள் என்பதால் அஜீத்பட வாய்ப்பை பறிக்க போட்டா போட்டி. இறுதிச் சுற்றில் இருந்தவர்கள் த ்ர ிஷாவும், சமந்தாவும். ஆனால், சட்டென்று மாறியிருக்கிறது வானிலை. அனுஷ்கா அதிரடியாக உள்ளே நுழைந்திருக்கிறார்.

பாகுபலி, ராணி ருத்ரம்மா தேவி என இரு தெலுங்கு சரித்திரப் படங்களில் தற்போது நடித்து வருகிறார் அனுஷ்கா. இரண்டும் தெலுங்குப்பட சரித்திரத்தை புரட்டிப் போடும் என எதிர்பார்க்கப்படும் படங்கள். இப்போதைக்கு இவ்விரு படங்கள் மட்டுமே அனுஷ்காவின் கவனத்தில் உள்ளது. இப்படியொரு ச ூழலில்தான், அஜீத்துடன் இதுவரை ஜ ோடி சேராத அனுஷ்காவை நடிக்க வைத்தால் என்ன என்ற யோசனை தோன்றியதாம் கௌதமுக்கு.

ஆரம்ப நிலையில் இருக்கும் இந்த யோசனை அஜீத் தலையசைத்தால் நிஜமாகும் என்கிறார்கள் ஸ்டுடியோ வட்டாரத்தில்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments