Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷங்கருக்கு மம்முட்டி, மணிரத்னத்துக்கு ஃபகத் ஃபாசில்...?

Webdunia
வெள்ளி, 3 ஜனவரி 2014 (11:39 IST)
FILE
பிரபல இயக்குனர்களின் படங்களில் நடிக்கப் போகும் ஹீரோக்கள் யார் என்பதை அறிவதில் ஒரு த ்ர ில் இருக்கவே செய்கிறது. கடல் படத்தையடுத்து மணிரத்னம் யாரை ஹீரோவாக வைத்து படம் இயக்குகிறார்?

இந்த கேள்விக்கு அதிகம் பேர் டிக் செய்திருக்கும் பெயர் ஃபகத் ஃபாசில். இயக்குனர் ஃபாசிலின் மகனான இவரின் முதல் படம் 2002 ல் வெளியானது. ஃபாசிலே மகனை இயக்கியிருந்தார். படம் பம்பர் தோல்வி. படம் மட்டுமில்லை ஃபகத்தும் தேற மாட்டார் என முத்திரைக் குத்தப்பட்டார். 7 வருட இடைவெளிக்குப் பிறகு முன் வழுக்கையுடன் வந்த ஃபகத் இப்போது முன்வரிசை ஹீரோ. சென்ற வருடத்தில் மட்டும் இவர் நடித்த 12 படங்கள் வெளியாயின. இரண்டு மூன்றை தவிர மற்றவை வெற்றி.

இவரைதான் மணிரத்னம் தனது அடுத்தப் படத்தின் ஹீரோவாக்கப் போகிறார் என பலமாக பேச்சு அடிபடுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவரலாம்.

ஐ படத்தை இயக்கி வரும் ஷங்கரும் மலையாள நடிகரையே தனது அடுத்தப் படத்தில் நடிக்க வைக்க இருக்கிறார் என இரண்டு நாள்களாக இன்டஸ்ட ்ர ியில் பேச்சு. ஷங்கர் ரஜினியை வைத்து எந்திரன் இரண்டாம் பாகம் எடுக்கிறார் என்பதெல்லாம் ஓய்ந்த நிலையில் தெளிந்து வந்திருக்கும் செய்தி இது.

ஷங்கர் அடுத்து சரித்திர படத்தை இயக்கப் போவதாகவும், அதற்காகவே மம்முட்டியை அவர் தேர்வு செய்ய விரும்புவதாகவும் தகவல் உள்ளது.

உறுதி செய்யப்படாத தகவலாக இருந்தாலும், பிரபலங்களைப் பற்றியது என்பதால் சொல்லாமல் இருக்க முடியாதே.


ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

Show comments