Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜன.30 இங்க என்ன சொல்லுது

ஜன.30 இங்க என்ன சொல்லுது
, வெள்ளி, 3 ஜனவரி 2014 (11:15 IST)
விடிவி கணேஷ், மீரா ஜாஸ்மின் நடித்திருக்கும் இங்க என்ன சொல்லுது ஜனவரி 30 ஆம் தேதி வெளியாகிறது.
FILE

விண்ணைத்தாண்டி வருவாயா படம், நடிகர் என்ற அந்தஸ்துடன் கணேஷ் என்ற பெயருக்கு முன்னால் விடிவி என்ற அடைமொழியையும் கணேஷுக்கு தந்தது. ஜோக் எதுவும் சொல்ல வேண்டிய தேவையின்றி அவரது கரகர குரலே அனைவரையும் சிரிக்க வைப்பது பெரிய பலம். அந்த குரலே அவரை மீரா ஜாஸ்மினின் ஜோடியாக்கியிருக்கிறது.

நடுத்தர வயது தாண்டிய நபரின் காதல் கதையான இங்க என்ன சொல்லுது ஜனவரி 30 திரைக்கு வரவுள்ளது. வின்சென்ட் செல்வா இயக்க, படத்தின் இன்னொரு ஹீரோவாக சந்தானம். சிம்பு, ஆண்ட்ரியா கௌரவ வேடத்தில்.

படம் நிச்சயம் ஹிட்டாகும். அது எப்படி என்று சந்தேகப்படுகிறவர்களுக்கு. படத்தின் உரிமையை வாங்கியிருப்பது ராம.நாராயணனின் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil