Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழில் ரீமேக்காகும் த்ரிஷ்யம்?

தமிழில் ரீமேக்காகும் த்ரிஷ்யம்?
, வெள்ளி, 3 ஜனவரி 2014 (11:13 IST)
சென்சேஷனல் ஹிட் என்போமே. அப்படியொரு வெற்றியை பெற்றிருக்கிறது த்ரிஷ்யம். கிறிஸ்மஸை முன்னிட்டு வெளியான மோகன்லால் படம்.
FILE

ஓவர்ஸ்மார்ட் வேடங்களாக நடித்து வந்த மோகன்லாலுக்கு இந்தப் படம் பெரிய நிம்மதியை தந்திருக்கிறது. அவரைவிட அதிகமாக அவரது ரசிகர்களுக்கு. ஜார்ஜ் குட்டி என்ற கேபிள் ஆபரேட்டர் வேடத்தில் மனிதர் வாழ்ந்திருக்கிறார்.

மனைவி மீனா, இரண்டு மகள்கள், இயற்கையால் சூழ்ந்த வீடு என்று நிறைவான வாழ்க்கை வாழ்கிறவர் மோகன்லால். அவரது குடும்பத்தில் எதிர்பாராத பிரச்சனை உருவாகிறது. டீன்ஏஜ் மகளின் நண்பனால் உருவாகும் அப்பிரச்சனை அந்த குடும்பத்தின் மகிழ்ச்சியை, அந்நியோன்யத்தை அப்படியே குலைத்துப் போடுகிறது. அதிலிருந்து அக்குடும்பம் எப்படி மீண்டது என்பதுதான் கதை.
webdunia
FILE

இயக்குனர் ஜீது ஜோஸப் அவரின் திரைக்கதைக்காக பேசப்படுகிறவர். பிருத்விராஜ் நடித்த மெமரிஸ் படமும் இவருடையதே. த்ரிஷ்யம் அவரை உச்சாணியில் கொண்டு சேர்த்திருக்கிறது. இந்தப் படத்தை ரீமேக் செய்ய அனைத்து மொழி தயாரிப்பாளர்களும் ஆவலாக உள்ளனர். ரீமேக் உரிமையை வாங்க ஏற்கனவே போட்டி ஆரம்பமாகிவிட்டது.

படத்தைப் பார்த்த விக்ரமும் வெகுவாக கவரப்பட்டு பரவசமுடன் பேசியிருக்கிறார். ஆனால் டீன்ஏஜ் பெண்ணின் தந்தையாக சீயான் நடிப்பாரா என்பது கேள்விக்குறி. அவர் நடித்தாலும் இல்லாவிட்டாலும் தமிழில் படம் ரீமேக் செய்யப்படும் என்பதே இன்றைய நிலவரம்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil