Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாடல்கள் அவசியம்

பாடல்கள் அவசியம்
, செவ்வாய், 31 டிசம்பர் 2013 (18:29 IST)
FILE
மக்கள் இரண்டரை மணி நேர படத்தில் குறைந்தது ஐந்து பாடல்களாவது இருக்கும், கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கலாம் என்பதற்காகத்தான் தியேட்டர்களுக்கே படம் பார்க்க வருகிறார்கள் என்கிறார் டான்ஸ் மாஸ்டர் தினேஷ்.

எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும், பாடல்கள் என்பது அவசியமான ஒன்றாக காலம் காலமாக ரசிகர்கள் மனதில் பதிய வைத்து விட்டோம். ஆங்கிலப் படங்களில் பாடல்களே இல்லாமல் வருகிறது ஆனால், தனியாக பாடலுக்கென்று ஆல்பங்கள் தயாரிக்கிறார்கள். அமோகமாகவும் விற்பனையாகி வருகிறது.

இளைஞர்கள் இன்றைக்கு வாழ்க்கையில் சம்பாதித்து செட்டிலாக வேண்டும் என்பதற்காக ஓடிக் கொண்டிருக்கும் வேளையில், படங்களில் இடம் பெறும் ஆடலும், பாடலும்தான் சற்று இளைப்பாறுதலாக இருக்கின்றன என பாடலின் அவசியத்தை உணர்த்துகிறார் தினேஷ் மாஸ்டர்.

Share this Story:

Follow Webdunia tamil