Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காக்கியில் நாயகி

காக்கியில் நாயகி
, புதன், 25 டிசம்பர் 2013 (11:19 IST)
FILE
எல்லா நடிகைகளுக்கும் ஒரு ஆக்சன் படங்களிலாவது நடித்து, ஹீரோ ரேஞ்சுக்கு தனித்துவம் பெற வேண்டும் என்ற கனவு இருக்கும். அப்படி ஹீரோயிணி, தனியாக வில்லன்களைப் பந்தாடும் அதிரடி ஆக்‌சன் படங்களிலும், காவல்துறை அதிகாரி வேடங்களிலும் நடித்து புகழ் பெற்றவர் நடிகை விஜயசாந்தி மட்டுமே.

அதற்குப் பின் பல நாயகிகள் போலீஸ் அதிகாரியாக காக்கி சட்டையில் வந்தாலும், விஜய்சாந்தி இடத்தை பிடிக்க முடியவில்லை. ஆனால், தற்போது தான் நடிக்கும் ஒரு மலையாளப் படத்தில் எதிரிகளைப் பந்தாடும் காவல்துறை அதிகாரியாக பறந்து பறந்து சண்டையிடப் போகிறாராம் பாவனா.

இதற்காக சிறப்பு பயிற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார். இந்தப் படத்திற்கு பின் அதிரடி ஆக்‌சன் படங்களில் ஒரு ரவுண்ட் வருவேன் என்கிறார் நம்பிக்கையுடன்.

Share this Story:

Follow Webdunia tamil