Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் சேதுபதியின் டீம்

விஜய் சேதுபதியின் டீம்
, செவ்வாய், 24 டிசம்பர் 2013 (13:47 IST)
தென்மேற்கு பருவக்காற்று தொடங்கி சமீபத்தில் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா..? வரைக்கும் வெற்றிப் படங்களாக கொடுத்து வந்ததால், விஜய் சேதுபதி‌க்கு நல்ல கதை சென்ஸ் இருக்கிறது. கதைகளை பிரமாதமாக தேர்வு செய்து நடிக்கிறார். ஒரு கதையை அவர் தேர்வு செய்து நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டாலே போதும், கண்டிப்பாக படம் ஹிட்தான் என்ற செய்தி தமிழ் சினிமா உலகில் தெரிந்தோ தெரியாமலோ பரபரப்பாக பரவி வருகிறது.
FILE

இதை கவனித்து வந்த சேதுபதி அதை உண்மையாக்கும் விதமாக, தனக்கு நெருக்கமான, தன் மீது அக்கரை கொண்ட நண்பர்கள் நான்கைந்து பேரை தேர்வு செய்து, கதை விவாதக் குழு என தனது சொந்த செலவில் அமைத்திருக்கிறார். அவர்களுடன் சேர்ந்துதான் கதை கேட்கிறார். ஓரளவுக்கு தேறும் என்று தெரிந்தால் தன் டீமோடு அமர்ந்து கதையை மெருகேற்றுகிறார். இதனால் இனி வரும் படங்களும் வெற்றிப் படமாக இருக்குமாம்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil