Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நானும்தான் அம்பாசிடர்

நானும்தான் அம்பாசிடர்
, திங்கள், 23 டிசம்பர் 2013 (16:52 IST)
இந்த அம்பாசிடர் சுதேசி தயா‌ரிப்பு கார் கிடையாது. இது வேறு.

சூது கவ்வும் படத்தில் மாமா என்று அழைத்தபடி இத்துனூண்டு உடையில் பசங்களின் டவுசரை கழற்றிய சஞ்சிதா இப்போது சென்னை கி‌ரிக்கெட் அணியின் விளம்பர தூதர் - அம்பாசிடர்.
FILE

விரைவில் செலிபி‌ரிட்டி கி‌ரிக்கெட் லீக் போட்டிகள் நடக்கயிருக்கின்றன. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் போ‌ஜ்பு‌ரி மொழி நடிகர்கள் இந்த கி‌ரிக்கெட் போட்டியில் கலந்து கொள்கிறார்கள். தமிழ் நடிகர்கள் விஷால் தலைமையில் சென்னை ரைனோஸ் என்ற பெய‌ரில் போட்டியில் கலந்து கொள்கிறார்கள். இப்படி ஒவ்வொரு மொழிக்கும் ஒரு அணி... ஒரு பெயர்.

தமிழக அணியின் விளம்பர தூதராக த்‌ரிஷா நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருடன் சஞ்சிதாவையும் தூதராக்கியிருக்கிறார்கள். போட்டி நடக்கும் மைதானங்களில் இவர்கள் வீரர்களை உத்வேகப்படுத்துவார்கள்.

இப்போதைக்கு இரண்டு படங்கள் மட்டுமே கைவசம் இருப்பதால் தூதர் பணியில் முழு வீச்சில் இறங்கயிருக்கிறார் சஞ்சிதா. போட்டி முடியும் போது மேலும் சில வாய்ப்புகளாவது கிடைக்க வேண்டுமே.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil