Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குடும்பத்துடன் பார்க்கக்கூடியது போங்கடி நீங்களும் உங்க காதலும்

குடும்பத்துடன் பார்க்கக்கூடியது போங்கடி நீங்களும் உங்க காதலும்
, திங்கள், 23 டிசம்பர் 2013 (12:50 IST)
ராமகிருஷ்ணன் இயக்கி நடித்திருக்கும் போங்கடி நீங்களும் உங்க காதலும் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் அளித்துள்ளது.
FILE

ராமகிருஷ்ணன் இயக்குனர் சேரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். கதை சொல்ல போன இடத்தில் குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் படத்தின் நாயகனானார். பிறகு கோரிபாளையம் படத்தில் நடித்தார்.

தொடர்ச்சியாக வாய்ப்புகள் வராத நிலையில் அவரே இயக்கி நடித்திருக்கும் படம்தான், போங்கடி நீங்களும் உங்க காதலும். தலைப்பில் ஆணாதிக்க தொனியை வைத்து போஸ்டரில் பெண்ணின் காலடியில் ஆண் விழுந்து கிடப்பதாக புகைப்படம் வெளியிட்டு, என்ன சமாச்சாரமாக இருக்கும் என்று அனைவரையும் யோசிக்க வைத்தனர்.

இந்தப் படத்தில் ராமகிருஷ்ணனுடன் ஆத்மியா, காருண்யா என இரண்டு பேர் நடித்துள்ளனர். இவர்கள்தான் நாயகிகள். கண்ணன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை விஸ்டம் பிக்சர்ஸ் ஹயாத் தயாரித்துள்ளார்.

படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் கட் எதுவும் சொல்லாமல் யு சான்றிதழ் அளித்துள்ளனர். வரிச்சலுகை கிடைக்க யு சான்றிதழுடன் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக படம் இருக்க வேண்டும் என்ற புதிய விதியை அதிமுக அரசு சேர்த்திருக்கிறது. இந்தப் படத்தின் பெயர் பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக இருப்பதால் வ்ரிச்சலுகை கிடைக்குமா என்பது கேள்விக்குறி.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil