Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனித உரிமை கமிஷனில் புகார் - வ.கௌதமன்

மனித உரிமை கமிஷனில் புகார் - வ.கௌதமன்
, ஞாயிறு, 22 டிசம்பர் 2013 (16:05 IST)
நேற்று முன்தினம் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒருநாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார். அவரது வருகையை முன்னிட்டு வ.கௌதமன் உள்பட மாணவர் அமைப்பினைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த கைது சம்பவத்தில் சட்டத்துக்கு புறம்பாக போலீஸாரால் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், மனித உரிமை கமிஷனில் புகார் கொடுக்க உள்ளதாகவும் இயக்குனர் வ.கௌதமன் தெரிவித்தார்.

ஈழப் படுகொலைக்கு எதிராக இன்னும் முனைப்புடன் செயலாற்றி வருகிறவர் இயக்குனர் வ.கௌதமன். ஈழப் படுகொலைக்கு அப்போது வெளியுறவு அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜிக்கும் பங்குண்டு. தற்போது ஜனாதிபதியாக இருக்கும் அவரின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்ட ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக மாணவர் அமைப்பினர் அறிவித்திருந்தனர். அந்தப் போராட்டத்துக்கு வ.கௌதமன் ஆதரவு தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் வ.கௌதமன் மற்றும் ஏழு பேர் பிரணாப் முகர்ஜி வருவதற்கு ஒருநாள் முன்பு கைது செய்யப்பட்டனர். நேற்று இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இதுபற்றி பேட்டியளித்த கௌதமன், போலீசார் தங்களுக்கு பெரும் தொல்லை கொடுத்ததாகவும், தங்களுடன் கைது செய்யப்பட்டவரை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து மனித உரிமை கமிஷனிடம் புகார் தரவிருப்பதாகவும் அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil