Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓரினச்சேர்க்கை - த்ரிஷா துணிச்சலான கருத்து

ஓரினச்சேர்க்கை - த்ரிஷா துணிச்சலான கருத்து
, ஞாயிறு, 22 டிசம்பர் 2013 (15:32 IST)
ஓரினச்சேர்க்கை குற்றம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்குப் பின் ஓரினச்சேர்க்கை குறித்த விவாதம் சூடு பிடித்திருக்கிறது. கலாச்சாரம், பண்பாடு என்று காலத்துக்கேற்ப மாறுகிற விஷயங்களை தூக்கிப் பிடித்து ஓரினச்சேர்க்கை தவறு, நம்முடைய கலாச்சாரம், பண்பாடு என்னாகிறது என்று ஒருசாரர் கூக்குரலிடுகின்றனர்.
FILE

இந்த கூக்குரலில் அதிகம் தென்படுவது மத அடிப்படைவாதிகள். ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் என்றில்லாமல் அனைத்து மத அடிப்படைவாதிகளும் இதனை எதிர்த்துள்ளனர். மத அடிப்படைவாதி மோடியுடன் கூட்டணி காணும் வைகோவும் ஓரினச் சேர்க்கை தவறு என்று சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்றிருக்கிறார்.

இந்நிலையில் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக த்ரிஷா கருத்து வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

நாம் ஜனநாயக நாட்டில் வசிக்கிறோம். இங்கு ஒருவர் யாருடன் வேண்டுமானாலும் நட்பு வைத்துக் கொள்ளலாம். எந்த மாதிரியான பழக்கமும் வைத்துக் கொள்ளலாம். செக்ஸ் என்பது சொந்த விஷயம். இவரோடுதான் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்று யாரையும் நிர்ப்பந்தம் செய்ய முடியாது என்று தனது கருத்தை தைரியமாக முன் வைத்திருக்கிறார்.

சர்ச்சை வருமோ, எதிர்ப்பு கிளம்புமோ என்ற பயமில்லாமல் த்ரிஷா தனது கருத்தை எடுத்துரைத்தது வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil