Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதவி இயக்குனர்களை கெட்டவார்த்தைகளில் திட்டும் தனுஷ்

Webdunia
ஞாயிறு, 22 டிசம்பர் 2013 (16:15 IST)
தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் வேலையில்லா பட்டதாரி படத்தை தயாரித்து வருகிறது. தனுஷ்தான் ஹீரோ. பொல்லாதவன், ஆடுகளம் படங்களின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் படத்தின் இயக்குனர்.
FILE

படப்பிடிப்பு தளத்தில் வேல்ராஜை ஓரமாக உட்கார வைத்து தனுஷ்தான் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் உதவி இயக்குனர்களாக இருப்பது அதிகமும் விஸ்காம் படித்த மாணவர்கள்.

இவர்களை தனுஷ் வேலை வாங்கும்விதம் பட யூனிட்டை முகம் சுழிக்க வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மரியாதைக் குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதும், சமயத்தில் கெட்ட வார்த்தைகளில் திட்டுவதுமாக தனது ஸ்டார் வேல்யூவை சாக்கடை லெவலுக்கு கீழிறக்கி நடந்து வருகிறார் தனுஷ்.

மற்ற தொழிலாளிகளை இப்படி கேவலமான வார்த்தைகளில் திட்டினாலோ, மரியாதைக் குறைவாக நடத்தினாலோ அவர்களின் சங்கங்கள் துணைக்கு வரும். ஆனால் உதவி இயக்குனர்கள் இயக்குனர்களின் தயவு இருந்தால் மட்டுமே ஒரு படத்தில் பணிபுரிய முடியும். இயக்குனர் நிராகரித்தால் அந்தப் படத்தில் பணிபுரிய இயலாது. மற்ற உடலுழைப்பு தொழிலாளர்களைப் பொறுத்தவரை ஒருவர் எந்தப் படத்தில் பணிபுரிவது என்பதை பெரும்பாலும் சங்கங்களே தீர்மானிக்கின்றன. உதவி இயக்குனர்கள் உறுப்பினர்களாக இருப்பதே இயக்குனர்கள் சங்கத்தில்தான்.

இப்படியொரு கையறு நிலையில் உதவி இயக்குனர்கள் இருப்பதால் ஹீரோ, ஹீரோயின், இயக்குனர் என்று எல்லோரின் கோபத்தின் வடிகாலாக இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

தனுஷின் செயல் நாகரிகமற்றது, கண்டிக்கத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments