Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச திரைப்பட விழா - அனிருத், அதர்வாவுக்கு விருது

Webdunia
வெள்ளி, 20 டிசம்பர் 2013 (15:11 IST)
FILE
டிசம்பர் 12ஆம் தேதி தொடங்கிய 11வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன் முடிவடைந்தது. அதையொட்டி போட்டிப் பி‌ரிவில் தேர்வு செய்யப்பட்ட படங்களுக்கும் கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

அமிதாப்பச்சன் பெய‌ரிலான இளம் சாதனையாளர் விருது இசையமைப்பாளர் அனிருத்துக்கு வழங்கப்பட்டது. பரதேசி படத்துக்காக சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதை அதர்வா பெற்றார். சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது தங்கமீன்கள் சாதனாவுக்கும், ஹ‌ரிதாஸ் பிருத்விராஜுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஹ‌ரிதாஸ் இரண்டாவது சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு விருது‌ம், தயா‌ரிப்பாளர், இயக்குனருக்கு தலா ஒரு லட்ச ரூபாய் ப‌ரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. முதல் ப‌ரிசை தங்கமீன்கள் தட்டிச் சென்றது.

இந்த விருதுகளை ஹிந்திப்பட இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா வழங்கினார்.

விருதுக்கு‌ரியவர்களை இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், ஸ்ரீப்‌ரியா, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்தனர்.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments