Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரேடியோ மிர்ச்சியில் வீரம் பாடல்கள் வெளியீடு

ரேடியோ மிர்ச்சியில் வீரம் பாடல்கள் வெளியீடு
, வியாழன், 19 டிசம்பர் 2013 (15:24 IST)
நாளை வீரம் படத்தின் பாடல்கள் ரேடியோ மிர்ச்சி எஃப்எம்மில் ஒலிபரப்பப்படுகிறது.

எந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை என்ற அ‌‌ஜீத்தின் நிலைப்பாடு காரணமாக அவர் படங்களின் பாடல்கள் வெளியீட்டு விழா உள்பட எந்த விழாவும் நடத்தப்படுவதில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அ‌‌ஜீத் தவிர்த்து பிறரே பங்கு கொள்வர். இதுவொன்றும் ரகசியமல்ல, அனைவரும் அறிந்ததே.
FILE

வீரம் படத்தின் பாடல்களும் எந்த விழாவும் இன்றி நாளை ரேடியோ மிர்ச்சியில் ஒலிபரப்பப்படுகிறது. காலை எட்டு மணி முதல் நடக்கும் இந்த ஒலிபரப்பின் நடுவே இயக்குனர் சிவாவும், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தும் பாடல்கள் உருவான விதம் குறித்த சுவாரஸியமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.

நாளை பாடல்கள் வெளியாகும் முன்பே இணையத்தில் திருட்டுத்தனமாக வீரம் பாடல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil