Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலுமகேந்திராவின் தலைமுறைகள் பற்றி எஸ்ரா விமர்சனம்

பாலுமகேந்திராவின் தலைமுறைகள் பற்றி எஸ்ரா விமர்சனம்
, புதன், 4 டிசம்பர் 2013 (18:19 IST)
FILE
தனது தலைமுறைகள் திரைப்படத்தை நெருக்கமான நண்பர்களுக்கும் சில எழுத்தாளர்களுக்கும் பல நாள்கள் முன்பே பிரத்யேகமாக திரையிட்டார் பாலுமகேந்திரா. அதில் எஸ்.ராமகிருஷ்ணனும் ஒருவர். படம் குறித்த தனது மனப்பதிவை தனது இணையத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் உணர்ச்சி பொங்க எழுதியுள்ளார். தலைமுறைகள் போன்ற சிறு பட்ஜெட் படங்களுக்கு ரசிகர்களை ஈர்ப்பது எஸ்ரா போன்றவர்களின் விமர்சனங்களும், விருதுகளும்தான்.

எஸ்ரா-வின் தலைமுறைகள் குறித்த வியப்பான வ‌ரிகள் இங்கே உங்களுக்காக.

இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் புதிய திரைப்படமான தலைமுறைகள் விரைவில் வெளியாக உள்ளது, படத்தைப் பாலுமகேந்திரா அவர்களுடன் இணைந்து தயாரித்திருப்பவர் இயக்குனர் சசிகுமார்.

பாலுமகேந்திரா அவர்களின் சிறப்பு அழைப்பின் காரணமாக இன்று காலை அப்படத்தினை தனித்திரையிடலில் பார்த்தேன். தமிழ் மீதும் தமிழ் மக்கள் மீதும் பாலுமகேந்திரா அவர்கள் கொண்டுள்ள ஒப்பற்ற அன்பின் வெளிப்பாடே இப்படம்.

நாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டிய அற்புதமான படம் இதுவென்பேன்,

தமிழ்ச்சினிமா உலகிற்கு இப்படம் அவரது கொடை, இந்திய சினிமா நூற்றாண்டிற்குத் தமிழ்சினிமாவின் அரிய பங்களிப்பு.
webdunia
FILE

எளிமையும் கவித்துவமும், உணர்ச்சிபூர்வமான கதை சொல்லும் முறையும், தேர்ந்த இசையும், கச்சிதமான நடிப்பும், ஒப்பற்ற ஒளிப்பதிவும் என இப்படம் உலகச் சினிமா அரங்கம் வியந்து பார்க்கும்படியாக உருவாக்கபட்டிருக்கிறது,

படத்தில் பாலுமகேந்திரா அவர்களே முக்கியக் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார், தமிழ்திரையில் இப்படியொரு கதாபாத்திரத்தை இதன் முன்பு நான் கண்டதேயில்லை, பாலுமகேந்திரா பிரமாதப்படுத்தியிருக்கிறார், கண்கலங்க வைக்கும் நடிப்பு,

5 டி கேமிராவில் படமாக்கியிருக்கிறார்கள், டிஜிட்டல் சினிமாவின் அதிகபட்ச சாதனையை இதில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் பாலுமகேந்திரா, இளையராஜாவின் இசை படத்தின் உணர்ச்சிப்போக்கினை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு தனிச்சிறப்போடு அமைக்கபட்டுள்ளது, இரண்டு சாதனையாளர்களும் ஒன்று சேர்ந்து பெருமைபடும் ஒரு கலைப்படைப்பை உருவாக்கியிருக்கிறார்கள்

ஒரு நல்ல தமிழ்படம் எப்படியிருக்கும் எனக் கேட்கும் எனது இளம் தலைமுறைக்கு, இந்தப் படத்தைப் பாருங்கள், இதுவே சிறந்த தமிழ்படம் எனச் சிபாரிசு செய்வேன்.

டிசம்பரில் படம் வெளியாக உள்ளது, அதுவரை காத்திருங்கள்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil