Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அங்கேயுமா அபத்த பேச்சு?

அங்கேயுமா அபத்த பேச்சு?
, வெள்ளி, 29 நவம்பர் 2013 (12:56 IST)
இந்தியன் பளோரமா பிரிவில் எந்தப் படம் திரையிட்டாலும் அப்படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு தந்து சில வார்த்தைகள் பேச வைப்பது மரபு. இந்த வருட கோவா திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் ராமின் தங்கமீன்கள் மட்டுமே தேர்வானது.
FILE

படத்தை திரையிடும் முன் வழக்கமான சம்பிரதாயங்கள் முடிந்து ராமிடம் மைக் தரப்பட்டது.

அங்கும், மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குதான் தெரியும், முத்தம் காமத்தில் சேர்த்தியில்லை என்ற தனது அபத்த கண்டுபிடிப்பை தனது பேச்சாக முன் வைத்தார்.
webdunia
FILE

ஏன் மகன்களை பெற்ற அம்மாக்களுக்கு முத்தம் காமத்தில் சேர்த்தியில்லை என்பது தெரியாதா?

குழந்தைகளை மட்டும்தான் காமத்தின் சுவடில்லாமல் கொஞ்சவோ முத்தமிடவோ முடிகிறது. எனில் அவர்களுக்கு தெரியாதா காமம் முத்தத்தில் சேர்த்தியில்லை என்பது?
webdunia
FILE

பலரும் பல கோணங்களில் ராமின் அப்த்த கண்டுபிடிப்பை அடித்து துவைத்த பிறகும் அங்கேயும் அதையே சொல்லியிருக்கிறார்...

webdunia
FILE

தரமணி படத்தின் விளம்பரத்தில் சதை தாண்டி காமம் தாண்டி செய்யும் தவம் காதல் என்று வார்த்தைகள் போட்டு, மேலே ஆண்ட்ரியாவின் ஈரமான பிரா தெரியும் படத்தை வெளியிட்ட அபத்தத்தை போன்றதுதான் இதுவும்.

தங்கமீன்கள் இந்தியன் பனோரமாவில் முதலில் தேர்வாகவில்லை என்பதும், தேர்வுக்குழு தலைவர் பி.லெனினின் முயற்சியால் கடைசியில் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டது என்பதும் முக்கியமானது.
webdunia
FILE

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil