Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இராஜராஜ சோழனின் போர்வாள் - பரிசோதனை முயற்சியில் இளையராஜா

இராஜராஜ சோழனின் போர்வாள் - பரிசோதனை முயற்சியில் இளையராஜா
, திங்கள், 26 ஆகஸ்ட் 2013 (10:18 IST)
FILE
இளையராஜா இசையில் ஊறிப்போனவர். ஐந்து நிமிடங்களில் ட்யூன் போட்டு அரை மணி நேரத்தில் ரிக்கார்டிங் செய்யக் கூடிய திறமைப்படைத்தவர். ஒரே வருடத்தில் ஐம்பது படங்களுக்கு அப்படிதான் இசையமைத்தார்.

சமீபமாக தனது இசைத் திறமையை குறிப்பிட்டு உலக இசையமைப்பாளர்களை சவாலுக்கு இழுக்கிற வேலையை செய்கிறார் இளையராஜா. நடந்து முடிந்த ஓ2 இசை நிகழ்ச்சிக்காக பத்திரிகையாளர்களை சந்தித்தவர், ப்ரியா படத்தில் தான் ஒரு நாளில் போட்ட பத்து நிமிட பின்னணி இசையை கம்போஸ் செய்ய, உலகில் எந்த இசையமைப்பாளரும் குறைந்தது ஒரு மாதம் எடுத்துக் கொள்வார்கள் என்று குறிப்பிட்டார். அதனை இங்கு குறிப்பிட காரணம் இருக்கிறது.

இப்போது அவர் செய்யும் பரிசோதனை முயற்சி முற்றிலும் புதிது:

விரைவில் இராஜராஜ சோழனின் வாள் திரைப்படத்துக்காக மக்கள் முன்னிலையில் மெட்டமைக்க இருக்கிறாராம். தனது மெட்டமைக்கும் வேகத்தை இந்த நிகழ்ச்சியில் வெளிப்படுத்துவதற்காகவே இந்த திட்டம்.
webdunia
FILE

இராஜராஜ சோழனை உழவன் திரைக்களம் தயாரிக்க, ஆர்.எஸ்.அமுதேஷ்வர் இயக்குகிறார். பாடலாசிரியர் சினேகன் நாயகன். இவர் ஏற்கனவே உயர்திரு 420 படத்தில் நாயகனாகவும், அமீரின் யோகியில் சின்ன வேடம் ஒன்றிலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜா இப்படி வித்தைக் காட்டுவதற்கு இப்போது என்ன தேவை இருக்கிறது? அவரது ரசிகர்களின் கேள்வி இதுதான்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil