Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜாவை சூசகமாக தாக்கிய தங்கர்

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2012 (14:14 IST)
பஞ்சப் பாட்டு பாடுவதில் தங்கர்பச்சானுக்கு கிராமி அவார்ட் தரலாம். அதுவும் மேடை கிடைத்துவிட்டால் இவர் ச‌ரியான மைக் முழுங்கி. ஒண்ணுமே ச‌ரியில்லை ஒலகமே ச‌ரியில்லைன்னு புலம்பித் தள்ளுவார் பாருங்க... அள்ள ரெண்டு குப்பை வண்டி வேணும்.

FILE
அம்மாவின் கைப்பேசி எடுக்கப் போறது உறுதியானதும் இளையராஜாவிடம் சென்று தலையை சொறிந்திருக்கிறார். சொந்தமா எடுக்கிறேன் ஏதோ பேருக்கு ஆயிரமோ ரெண்டாயிரமோ வாங்கிக்கங்க என்ற ‌ரீதியில் போட்டிருக்கிறார் ஒரு ராப்பாட்டு. அப்பாலே போ சைத்தானே என்று துரத்தியிருக்கிறார் இளையராஜ ா. ஞானியிடம் பழம் பழுக்காத கோபத்தில் புதிதாக ஒரு இசையமைப்பாளரை களம் இறக்கி புதிய இசை, புதிய திசை என்றெல்லாம் விளம்பரப்படுத்தினார். இந்த நமைச்சல் பிரஸ்மீட்டில் வெடித்தது.

இங்க எவனுமே ச‌ரியில்லை கதை எழுதினா நடிக்க வரமாட்டேனுறாங்க, இசையமைப்பாளரும் அப்படிதான் நிறைய துட்டு கேட்கிறானுங்க, இசையும் வாய்ல ஸாரி காதுல கேட்க முடியிறதில்லை என்று பிராய்ந்து தள்ளினார். அங்கே வாங்கிய குட்டுக்கு இங்கே வந்து மைக்கை வீங்க வைப்பதில் என்ன நியாயம். கேட்கிறவன் காது வலிக்குதில்ல.

ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர் எஸ்ஆர்எம் கல்வி ‌நிறுவன தலைவர் பச்சை முத்து என்கிற ப ா‌ ர ி வேந்தர். ஓட்டுக்காக தோளில் கலப்பையுடன் போஸ் தந்த மல்டி மில்லியனர் விவசாயி.

அட்ரா சக்கை இதுதாண்டா கூட்டணி.

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

Show comments