Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்யை சந்தித்த அசின்

விஜய்யை சந்தித்த அசின்
, சனி, 4 ஆகஸ்ட் 2012 (12:54 IST)
அசின் நடித்த நான்குப் படங்கள் 100 கோடியை தாண்டி வசூலித்துள்ளன. இந்த பெருமை வேறு ஒரு ஹீரோயினுக்கு மட்டுமே உள்ளது. அவர் க‌ரீனா கபூர். நான் ூறு கோடி ஹீரோயின் என்று அசின் தன்னைத்தானே சொல்லிக் கொண்டாலும் பாலிவுட்டோ, இந்தி ஊடகங்களோ இதனை ஒத்துக் கொள்வதாக இல்லை. இரண்டாம் நிலை ஹீரோயினுக்கு உ‌ரிய இடம்தான் அசினுக்கு.

எப்போது வேண்டுமானாலும் துண்டிக்கப்படும் பாலிவுட் உறவை முழுமையாக நம்ப முடியாது என்பதால் தென்னிந்திய ூண்டிலையும் அவ்வப்போது ூசி தட்டி வைக்கிறார். அந்தவகையில் அசின் சமீபத்தில் சந்தித்தது விஜய்யை.

துப்பாக்கி படம் சம்பந்தமாக விஜய் மும்பை சென்ற போது அவரை அசின் தேடி வந்து சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பு நடந்தது பிரபுதேவாவின் மும்பை வீட்டில். இவர்கள் மூவரும் இணைந்து போக்கி‌ரி படத்தை தந்தது இங்கு நினைவு கூரத்தக்கது.

இந்த சந்திப்பு காரணமாக இவர்கள் மூவரும் விரைவில் இணையக்கூடும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

Share this Story:

Follow Webdunia tamil