Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீதைக்கு சில்க் வேடமா? பதறிய நயன்தாரா

சீதைக்கு சில்க் வேடமா? பதறிய நயன்தாரா
, வெள்ளி, 22 ஜூன் 2012 (10:46 IST)
கன்னடத்தில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை படமாகிறது. அதேபோல் மலையாளத்திலும் ஒரு படம் தயாராகிறது. தமிழில் சில்க்கின் கதையை படமாக்குகிறவர்கள் முதலில் நயன்தாராவை அணுகியிருக்கிறார்கள்.

கவர்ச்சியாக நடிக்கணும், 2 கோடி ரூபாய் ஒரே பேமண்டாக தந்துவிடுகிறோம் என்று நயன்தாராவிடம் கூறியுள்ளனர். அதற்கு நயன்தாரா மறுத்துள்ளார். அதற்கு முக்கிய காரணம் அவர் நடித்த ஸ்ரீ ராமரா‌ஜ்‌ஜியம்.

இந்தப் படத்தில் நயன்தாரா சீதையாக நடித்திருந்தார். முதலில் கிளம்பிய எதிர்ப்புகளை தூளாக்கும் விதத்தில் நயன்தாராவின் கண்ணியமான நடிப்பு பெ‌ரிதும் பேசப்பட்டது. சீதையாக நயன்தாராவை தவிர வேறு யாரையும் யோசிக்க முடியாது என விமர்சகர்கள் பாராட்டினர்.

இந்த இமே‌ஜ் சில்க் வேடத்தில் நடித்து கெடுத்துக் கொள்ள தயாராக இல்லை என 2 கோடி ஆஃபரை திருப்பி அனுப்பியிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil