Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சகுனி - ஒரு வில்லங்க செய்தி

Webdunia
திங்கள், 12 மார்ச் 2012 (20:39 IST)
WD
சகுனி படத்தின் டபுள் பாஸிடிவ் பார்த்த கார்த்தியின் குடும்பம் படம் குறித்து கவலை கொண்டதைப் பற்றி எழுதியிருந்தோம். ‌ரீஷூட் பண்ணப்படலாம் என்று நாம் எழுதியதுதான் நடக்கும் போலிருக்கிறது.

சகுனியில் வில்லனாக வரும் சலீம் கௌசின் பகுதிகள் மிகவும் பலவீனமாக இருப்பதாக கார்த்தியும், குடும்பமும் கருதுகிறது. சலீம் கௌஸ் வெற்றிவிழா படத்தில் அசத்திய நடிகர். சின்ன கவுண்டர், வேட்டைக்காரன் உள்ளிட்டப் படங்களிலும் நடித்திருப்பார். மலையாளம் தாழ்வாரம் படத்தில் மோகன்லாலுக்கு இணையாக இவர் காட்டிய நடிப்பு இப்போதும் அங்கு சிலாகிக்கப்படுவதுண்டு.

சகுனியில் எது ச‌ரியில்லை என‌த் தெ‌ரியவில்லை, சலீம் கௌஸை மாற்றுவது என முடிவு செய்திருக்கிறார்கள். அவருக்குப் பதில் பிரகாஷ்ர ாஜை நடிக்க வைப்பதாக திட்டம். ஏறக்குறைய படம் முடிந்த நிலையில் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள். இது படத்துக்கு நெகடிவாக அமைந்துவிடும் என்பதால், சலீம் கௌஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கும் முன் அவரை நீக்கிவிட்டதைப் போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

மேலும், இந்த மாற்றம் இயக்குனர் சங்கர் தயாள் இல்லாமல் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. உண்மையா பாஸ்?

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

கிளாமர் உடையில் போட்டோஷூட் நடத்திய கியாரா அத்வானி!

சூர்யா கார்த்திக் சுப்பராஜ் படத்தின் கதாநாயகி இவர்தான்…!

தக் லைஃப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு பற்றி வெளியான தகவல்!

Show comments