Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெஸ்டிவெல் படங்கள்

பெஸ்டிவெல் படங்கள்
, புதன், 11 ஜனவரி 2012 (20:07 IST)
இனி ர‌ஜினி, கமல், விஜய், அ‌‌ஜீத் படங்களை பெஸ்டிவெல் படங்கள் என்று தாராளமாக அழைக்கலாம். திரைப்பட விழாக்களில் இவர்களின் படங்கள் திரையிடப் போகிறார்களா என்று பயப்பட வேண்டாம். இது வேறு.

பெ‌ரிய ஸ்டார்களின் படங்களால் சிறு முதலீட்டுப் படங்கள் பாதிக்கப்படுவதால் மாஸ் ஹீரோக்களின் படங்களை திருவிழா நாட்களில் மட்டும் - அதாவது பொங்கல், ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு, மே ஒன்று, ஆகஸ்டு 15, தீபாவளி ஆகிய தினங்களில் மட்டும் வெளியிடுவது என்று முடிவு செய்துள்ளது தயா‌ரிப்பாளர்கள் சங்கம். இந்த முடிவு இன்னும் அதிகாரபூர்வமாகவில்லை, ப‌ரிசீலனையில் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil