Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யுகே பாக்ஸ் ஆஃபிஸ்

யுகே பாக்ஸ் ஆஃபிஸ்
, புதன், 23 பிப்ரவரி 2011 (20:49 IST)
யுகே பாக்ஸ் ஆஃபிஸில் தொடர்ந்து நல்ல கலெ‌க்சனை பெற்று வருகிறது விஜய்யின் காவலன்.

சென்ற வார யுகே பாக்ஸ் ஆஃபிஸில் ராதாமோகனின் பயணம் 38வது இடத்தைப் பிடித்துள்ளது. இப்படம் வெளியான முதல் மூன்று தினங்களில் 4,768 பவுண்ட்கள் வசூலித்துள்ளது. நான்கு திரையிடல்களின் மூலம் இந்த கலெ‌க்சனை இப்படம் பெற்றுள்ளது. நமது ரூபாய் மதிப்பில் இது ஏறக்குறைய 3.47 லட்சங்களாகும்.

காவலன் தனது நான்காவது வார இறுதியில் 60வது இடத்தைப் பிடித்துள்ளது. வார இறுதியில் 7 திரையிடல்களில் 1,532 பவுண்ட்களை இப்படம் பெற்றுள்ளது. இதுவரை மொத்தமாக இதன் கலெக்ஷன் 1,25,483 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 91.38 லட்சங்கள்.

ஜெய‌ம் ர‌வி‌யி‌ன் தில்லாலங்கடி 23 வாரங்களாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் மொத்த வசூல் 35.16 லட்சங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil