Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கை மாறிய மன்மதன் அம்பு

கை மாறிய மன்மதன் அம்பு
, புதன், 24 நவம்பர் 2010 (13:47 IST)
ரெட் ஜெயண்ட் மூவிஸின் இந்த மூவ் அனைவருக்கும் பு‌ரியாத புதிராகவே உள்ளது.

மற்றவர்கள் தயா‌ரித்த படங்களையே விட்டு வைக்காமல் விலை பேசும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெரும் பொருட் செலவில் தான் தயா‌ரித்த மன்மதன் அம்பு படத்தை வேறொரு நிறுவனத்துக்கு விற்றுள்ளது.

கமல், மாதவன், த்‌ிஷா, சங்கீதா என பெரும் நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தின் மீதா இல்லை பட்ஜெட்டின் மீதா, எதன் மீது உதயநிதி ஸ்டாலினுக்கு நம்பிக்கையில்லை என்று தெ‌ரியவில்லை.

முதலாவதாக படத்தின் இசை வெளியீட்டு உ‌ரிமையை குடும்ப தொலைக்காட்சியான கலைஞருக்கு வழங்காமல் பெரும் தொகைக்கு விஜய் டிவிக்கு கை மாற்றினார். இப்போது படத்தின் ஒட்டுமொத்த திரையரங்கு உ‌ரிமையை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்டுக்கு கணிசமான லாபத்தில் விற்றிருக்கிறார்.

மைனாவை வாங்கி பறக்கவிட்டவர் மன்மதன் அம்பை கை கழுவியதுக்கு என்ன காரணம் என்பது பு‌ரியாமல் திகைத்துப் போயிருக்கிறது கோடம்பாக்கம்.

Share this Story:

Follow Webdunia tamil