Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விவேக்கின் ஒரு பொய் கதை

விவேக்கின் ஒரு பொய் கதை
, திங்கள், 28 ஜூன் 2010 (18:45 IST)
நடிகர் விவேக் சமீபத்தில் கேரளாவில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். தேங்காய் வெள்ளை, இட்லி வெள்ளை என்று சம்பந்தமில்லாமல் பேசியவ‌ர், அதுபோல் மலையாளிகளின் மனசும் வெள்ளை என்று முடிக்க, அவர் எதிர்பார்த்த அப்ளாசுக்குப் பதில் கூச்சலே ப‌ரிசாக கிடைத்தது.

மேடை பேச்சே ஒத்துக் கொள்ளாத நிலையில் விவேக்கை நாயகனாக்க மலையாள படவுலகம் முன் வந்துள்ளதாக ‘திடுக்’ தகவல் வந்துள்ளது.

மலையாளத்தில் ஒரு நுனக்கதா (ஒரு பொய் கதை) என்ற பெய‌ரில் ஒரு படம் தயாராகிறது. ஜான்சன் தங்கச்சன் இந்தப் படத்தை இயக்குகிறார். இதில் சினிமா ஆர்வம் கொண்ட இன்ஸ்பெக்டராக நடிக்க விவேக்கை அணுகியிருக்கிறார்கள் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

விவேக்கின் ஹஸ்கி வாய்ஸ் உளறலை கேட்கும் பாக்கியம் மலையாளிகளுக்கும் கிடைக்கட்டும்.

Share this Story:

Follow Webdunia tamil