Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏவிஎம்-மில் கருப்பம்பட்டி

Webdunia
திங்கள், 17 மே 2010 (17:36 IST)
கதிர்வேல் படத்தில் தனி ஹீரோவாக நடித்துவரும் அ‌‌‌ஜ்மல் அடுத்து நடிக்கும் படம் கருப்பம்பட்டி. நடித்துவரும் என்று சொல்வதுதான் பொருத்தம். படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது.

ஏவிஎம் ஸ்டுடியோவில் அ‌‌‌ஜ்மலும் அர்ச்சனாவும் ஆடிப் பாடும் பாடல் ஒன்றை சமீபத்தில் படமாக்கினர். ஓ இந்திரா எனத் தொடங்கும் அந்த கபிலனின் பாடலுக்கு கண்ணன் இசையமைத்திருந்தார்.

பிரபு ராஜசோழன் இயக்கும் இந்தப் படத்தில் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார் அ‌‌‌ஜ்மல். மகன் அ‌‌‌ஜ்மலுக்கு ஜோடி அபர்ணா பா‌‌‌ஜ்பாய்.

படத்தின் பெயர் கருப்பம்பட்டி என்றாலும் அதற்கு எந்த சம்பந்தமும் இல்லாத விதத்தில் மிகுந்த பொருட் செலவில் ஹைடெக்காக படம் தயாராகி வருகிறது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments