Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ர‌ஜினி ஒரு ஜோக்கர் - ஜாக்குவார் தங்கம்

ர‌ஜினி ஒரு ஜோக்கர் - ஜாக்குவார் தங்கம்
, சனி, 20 பிப்ரவரி 2010 (20:32 IST)
தனிப்பட்டப் பிரச்சனைக்கு ஜாதியை இழுப்பது பேஷனாகிவிட்டது. பத்தி‌ரிகையாளர்களுடன் ஏற்பட்ட மோதலில் நடிகர் விவேக் தஞ்சமடைந்தது தனது ஜாதி சங்கத்தை.

அ‌ஜீ‌த் பிரச்சனையில் ஜாக்குவார் தங்கமும் ஜாதியை சொல்லி மிரட்டி வருகிறார். தனது ஜாதியினருடன் சென்று அ‌ஜீ‌த் வீட்டை முற்றுகையிடப் போவதாக அவர் சொன்னதையடுத்து அ‌ஜீ‌த்தின் வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இன்று பத்தி‌ரிகையாளர்களை சந்தித்த ஜாக்குவார் தங்கம், அ‌ஜீ‌த் மீது நடிகர் சங்கத்தில் புகார் செய்திருப்பதாக தெ‌ரிவித்தார். அ‌ஜீ‌த்துக்கு ர‌ஜினி ஆதரவு தெ‌ரிவித்திருக்கிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்தவர், ர‌ஜினி ஒரு ஜோக்கர் அவர் சொல்வதையெல்லாம் யாரும் சீ‌ரியஸா எடுத்துக்கிறதில்லை என்றார்.

அ‌ஜீ‌த் பிரச்சனையில் ஜாக்குவார் தங்கம் அ‌ஜீ‌த்தையும், ர‌ஜினியையும் தாக்கிப் பேசினார். அவரது பேச்சை இருவருமே கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil