Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமிதாப் வேடத்தில் கமல்?

அமிதாப் வேடத்தில் கமல்?
, சனி, 30 ஜனவரி 2010 (16:24 IST)
அமிதாப்பச்சன் நடித்த பா விரைவில் தமிழில் ‌‌ரீமேக் செய்யப்படுகிறது. படத்தின் தமிழ் ‌‌ரீமேக் உ‌ரிமையை இளையராஜவாங்கியிருக்கிறார்.

பால்கி இயக்கிய பா ரசிகர்களிடம் மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது. முக்கியமாக சிறுவனாக நடித்த அமிதாப்புக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்தப் படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். இசை இளையராஜா.

பா-வின் தமிழ் ‌ரீமேக் உ‌ரிமையை இளையராஜவாங்கியுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. தமிழில் படத்தை இயக்க பி.சி.ஸ்ரீராமிடம் அவர் பேசியிருப்பதாகவும் தெ‌ரிகிறது. அமிதாப் நடித்த வேடத்தை தமிழில் யார் செய்யப் போகிறார் என்பது பெரும் கேள்விக்குறி.

இளையராஜாவின் சாய்ஸ் கமல்ஹாசன். யாவரும் கேளிர் படத்தில் நடிக்கயிருக்கும் கமல் இந்த வாய்ப்பை ஒத்துக்கொள்வாரா என்ற கேள்வியும் உள்ளது. கமல் மறுக்கும்பட்சத்தில் அமிதாப் வேடத்தை யார் ஏற்பார்?

விடை விரைவில் தெ‌ரிய வரலாம்.

Share this Story:

Follow Webdunia tamil