Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழின் 3 இடியட்ஸ் யார்?

தமிழின் 3 இடியட்ஸ் யார்?
, திங்கள், 11 ஜனவரி 2010 (15:58 IST)
இந்தியில் வெளியான 3 இடியட்ஸ் பத்து நாட்களில் 240 கோடிகளை வசூலித்திருப்பதாக ஆச்ச‌ரியத்துடன் குறிப்பிடுகிறார்கள். படத்தின் கதையை சிலாகிக்காதவர்கள் இல்லை. இந்திய கல்விததுறையின் மறுமலர்ச்சி என்றெல்லாம் ஜன்னி வரும் அளவுக்கு புகழுரைகள்.

3 இடியட்ஸின் தெலுங்கு மற்றும் தமிழ் ‌‌ரீமேக் உ‌ரிமையை ஜெமினி பிலிம் சர்க்யூட் வாங்கியிருக்கிறது. இவர்கள்தான் ரா‌ஜ்குமார் ஹிரானியின் முன்னாபாய் எம்பிபிஎஸ் படத்தின் ‌ரிமேக் உ‌ரிமையையும் வாங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் அமீர்கான் நடித்த வேடத்தில் பவன் கல்யாண், மகேஷ்பாபு ஆகியோ‌ரின் பெயர்கள் அடிபடுகின்றன. தமிழில் யார் நடிப்பார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்தியில் நடித்த வேடத்தை தமிழிலும் செய்ய மாதவன் தயாராக இருக்கிறார். இப்போதைய கேள்வியெல்லாம் அமீர்கான் ரோலில் நடிக்கப் போவது யார்?

விஜய், சூர்யா... என்று தயா‌ரிப்பாளர்கள் தரப்பு முன்னணிகள் பக்கம் முகம் திருப்பி நிற்கிறது. கடைக்கண் பார்வையாவது கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil