Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேட்டைக்காரன் - காற்றில் பறந்த கட்டுப்பாடு

Webdunia
சனி, 7 நவம்பர் 2009 (18:21 IST)
வேட்டைக்காரன் டிசம்பர் 18ஆ‌ம் தேதி திரைக்கு வருகிறது. படம் பொங்கலுக்கு வரும் என்று எதிர்பார்த்த விஜய் ரசிகர்களுக்கு இதில் ஏமாற்றம்தான்.

தீபாவளிக்குப் பிறகு பெ‌ரிய நடிகர்களின் பிரமாண்ட படங்கள் தீபாவளி, பொங்கல் போன்ற திருவிழா நாட்களில் மட்டுமே ‌ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற புதிய கட்டுப்பாட்டை தய ா‌ ரிப்பாளர்கள் சங்கம் விதித்திருந்தது. அதேபோல் சிறிய பட்ஜெட் நேரடி தமிழ்ப் படங்கள் வாரத்துக்கு இரண்டு மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

இரண்டாவது தீர்மானம் நேற்று பிசுபிசுத்தது. நேற்று மட்டும் அதேநேரம் அதேஇடம், சா பூ த ி‌ ர ி, பாலைவனச்சோலை, தம்பிவுடையான் என நான்கு படங்கள் ‌ரிலீஸாயின. முதல் தீர்மானத்தை நசுக்க வருகிறது வேட்டைக்காரன்.

தய ா‌ ரிப்பாளர்கள் சங்கத்தின் தீர்மானப்படி வேட்டைக்காரன் பொங்கல், புது வருடப் பிறப்பு போன்ற தினங்களில்தான் வெளியிடப்பட வேண்டும். ஆனால் எந்த திருவிழாவும் இல்லாத டிசம்பர் 18 படம் திரைக்கு வருகிறது. ரொம்ப அழுத்தி கேட்டால், 25 கிறிஸ்துமஸ், அதையொட்டிதான் படம் திரைக்கு வருகிறது என்று உறுமியடிக்கிறார்கள்.

பெ‌ரிய இடத்து விவகாரம் என்றால் விதிமுறையும் விடுமுறைக்கு போய்விடுமாம்.

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

Show comments