Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜயகாந்துக்கு நோ சொன்ன நடிகை

விஜயகாந்துக்கு நோ சொன்ன நடிகை
, செவ்வாய், 22 செப்டம்பர் 2009 (15:37 IST)
தேர்தல் வந்தால் விஜயகாந்திடம் சீட் கேட்டு நெருக்குகிறார்கள். இன்னொரு பக்கம் விஜயகாந்தின் பெயரை கேட்டாலே ஓடி ஒளிகிறார்கள். முன்னது அரசியலில், பின்னது சினிமாவில்.

அது என்ன ராசியோ தெ‌ரியவில்லை. அரசியலில் விஜயகாந்த் தொடாதது கூட துலங்குகிறது. மாறாக சினிமாவில்? அரசியல் கட்சி ஆரம்பித்தபின் நடித்த ஒரு படம் கூட ஓடவில்லை. ஆறரை கோடி தமிழர்களுக்கு தலைவனாக துடிக்கும் ஒருவருக்கு ஆறுதல் வெற்றி கூட இல்லையென்றால் எப்படி?

மற்றவர்களை நம்பி பிரயோஜனம் இல்லையென்று தானே படம் இயக்க விஜயகாந்த் தயாராகிவிட்டார். படத்தின் பெயர் விருதகி‌ரி என்பது மட்டும் இப்போதைக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கதை? ஒரு பெ‌ரிய இலாகாவே அதற்காக மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறது.

விஜயகாந்தின் இப்போதைய பிரச்சனையெல்லாம் யாரை நாயகியாக்குவது என்பதுதான். கால்ஷீட் என்று போனாலே காத தூரம் ஓடுகிறார்களாம் இளம் நாயகிகள்.

சமீபத்தில் கேப்டனின் விருப்பப்படி பாவனாவிடம் கால்ஷீட்டுக்கு முயன்றிருக்கிறார்கள். ஹீரோ விஜயகாந்த் என்றதும், கால்ஷீட் ஃபுல்லாயிட்டுண்டு சேட்டா என பம்மியிருக்கிறது கிளி.

அடுத்து யாரை போடலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் கேப்டனின் அலுவலகத்தில். கஷ்டம்தான்.

Share this Story:

Follow Webdunia tamil