Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் படம் புறக்கணிப்பு - தமிழ் சங்கம் அதிரடி

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2009 (14:12 IST)
விஜய் படங்களை புறக்கணிப்பது என கனடா தமிழ் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் விஜய்க்கு புதுச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

webdunia photo
WD
தமிழ் சினிமா வர்த்தகத்தில் வெளிநாட்டுவாழ் ஈழத் தமிழர்களுக்கு பெரும் பங்கு உண்டு. கனடா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களை நம்பிதான் படங்களின் வெளிநாட்டு உ‌ ரிமை பெரும் தொகைக்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், விஜய் நடிக்கும் படங்களை புறக்கணிப்பது என கனடா தமிழ் சங்கம் அறிவித்துள்ளது, விஜய் படங்களின் வர்த்தகத்தை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ப ோ‌ ரில் அப்பாவி ஈழத் தமிழர்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். இந்த படுகொலைக்கு இலங்கை அரசுக்கு போர் பலமும், ஆன்ம பலமும் கொடுத்துதவியது இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு. இலங்கையின் போர் குற்றங்கள் சர்வதேச அரங்கில் விவாதிக்கப்படாமல் மூடி மறைக்கவும் உதவிப ு‌ ரிந்தது காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுதான். சோனியாகாந்திக்கு புலிகள் மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பே இந்த படுகொலைகளுக்கு மூலகாரணம் என்று ஈழத் தமிழர்கள் பலரும் கருதுகின்றனர்.

இதன் காரணமாக உலகெங்கிலும் உள்ள ஈழத் தமிழர்கள் காங்கிரஸ் கட்சின் மீது அளவுகடந்த வெறுப்புடன் உள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய் காங்கிரஸ் ராகுல்காந்தியை சந்தித்து அரசியல் பற்றி விவாதித்தது ஈழத் தமிழர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கனடா தமிழ் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜய் அரசியலில் ஈடுபடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தால் அவருடைய படங்களை புறக்கணிப்போம் என்று திட்டவட்டமாக தெ‌ர ிவித்துள்ளனர்.

ஒரு தமிழனாக இந்த அறிக்கைக்கு விஜய் மர ியாதை செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் பிரிவில் வழக்குப்பதிவு: ஏஆர் ரஹ்மான் எச்சரிக்கை..!

கலர்ஃபுல் ட்ரஸ்ஸில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வாணி போஜனின் லேட்டஸ்ட் அசரடிக்கும் போட்டோஷூட் ஆல்பம்!

நரகத்துல இருக்குறவனுக்கு சொர்க்கத்தோட சாவி கெடச்சா..?.. எதிர்பார்ப்பைக் கூட்டும் சொர்க்கவாசல் டிரைலர்!

தளபதி 69 பட ஷூட்டிங்கை சீக்கிரம் முடிக்க விஜய் உத்தரவு.. பின்னணி என்ன?

Show comments