Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸில் விஜய்?

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2009 (15:22 IST)
ஐம்பதாவது படத்தைவிட அரசியலில்தான் அதிக ஆர்வமாக இருக்கிறார் விஜய். அவரது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புதுச்சே‌ரியில் நடந்த நற்பணி மன்ற விழாவில் தனது அரசியல் ஆசையை மீண்டுமொருமுறை அழுத்தமாக வெளிப்படுத்தினார். இந்த பேச்சின் போது புதுச்சே‌ர ி முதல்வர் வைத்தியலிங்கம் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டெல்லி சென்ற விஜய் ராகுல் காந்தியை சந்தித்து நீண்ட நேரம் உரையாடியிருக்கிறார். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ராகுல் காந்தியுடனான சந்திப்பு குறித்து விஜய் இதுவரை வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. அதேநேரம் இந்த சந்திப்பு குறித்து கருத்து தெ‌ரிவித்த அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன், மிகப் பெ‌ரிய கட்சியின் பொதுச் செயலாளர் விஜய்யை சந்தித்து பேசியிருக்கிறார். முக்கியமான விஷயம்.. ஆனால் அதுபற்றி இப்போது கூற முடியாது என சஸ்பென்ஸை நீட்டித்திருக்கிறார்.

இந்த சந்திப்பு, விஜய் காங்கிரஸில் சேரப்போகிறார் என்ற உற்சாகத்தை தொண்டர்களிடமும், எ‌ ரிச்சலை தலைவர்களிடமும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. பார்ப்போம் என்ன நடக்கப் போகிறது என்பதை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏஆர் ரஹ்மானை பிரிந்தது ஏன்? சாய்ரா பானு விளக்கம்..!

என்ன கீர்த்திம்மா இதெல்லாம்..? பாலிவுட்டுக்கு மட்டும் இவ்ளோ தாராளமா? - Unlimited க்ளாமரை கட்டவிழ்த்த கீர்த்தி சுரேஷ்!

தனுஷுடன் சிம்பு, சிவகார்த்திகேயன்! ஆனா நயன்தாராவுக்கு மட்டும் நோ! - வைரல் புகைப்படம்!

உழைக்கும் மக்களுக்கு இன, ஜாதி வெறி வேணாம்.. சிறப்பாக சொன்னது ‘பராரி’! - படக்குழுவை பாராட்டிய திருமாவளவன்!

ரஜினி, விஜய்யை தாண்டி புதிய சாதனை படைத்த சிவகார்த்திகேயன்!

Show comments