Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கந்தசாமி ஏற்படுத்திய கலக்கம்

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2009 (19:57 IST)
இந்த மாதம் திரைக்கு வருகிறது கந்தசாமி. மெகா பட்ஜெட் படம் என்பதைத் தாண்டி, படத்தை தய ா‌ ரித்திருப்பவர் தாணு என்பதற்காகவே பயப்படுகிறார்கள் இன்டஸ்ட ்‌ ரியில்.

விளம்பர விஷயத்தில் தாணு ஒரு டைனசர். சுற்றியுள்ள அனைத்தையும் துவ‌ம்சம் செய்துவிடுவார். கந்தசாமியோ அவர் தய ா‌ ரித்த படங்களில் மிகப் பிரமாண்டமானது. விளம்பரத்தில் அவர் ஆடப்போகும் சிவதாண்டவத்தை கற்பனை செய்தே கதிகலங்கிப் போயிருக்கிறது கோடம்பாக்கம்.

பிரதான விஷயம் வேறு. கந்தசாமிக்கு ஏறக்குறைய 1000 ப ி‌ ரிண்டுகள் போடுகிறார்கள். இதில் தமிழுக்கு மட்டும் 600க்கும் மேல் என்கின்றன தகவல்கள். இம்மாதம் வெளியாகும் படத்துக்காக தமிழ்நாட்டின் ஆகச் சிறந்த திரையரங்குகள் அனைத்திற்கும் அட்வான்ஸ் கொடுத்திருப்பதாக கேள்வி. அதுவும் எத்தனை நாட்களுக்கு? ஏறக்குறைய ஐம்பது நாட்களுக்கு.

ஆயிரத்தில் ஒருவனோ, உன்னைப்போல் ஒருவனோ... எந்தப் படமாக இருந்தாலும் சில வாரங்களுக்கு சுமாரான திரையரங்கைக்கூட கற்பனை செய்ய முடியாது. கந்தசாமி ஓடி தேய்ந்தால்தான் வேறு எந்தப் படத்துக்கும் வெள்ளித்திரையே கிடைக்கும். கமல் படத்துக்கே இந்த நிலை என்றால் மற்ற படங்கள் பற்றி கற்பனை செய்து பாருங்கள்.

ஆடிப் பெருக்குக்கு திறந்துவிட்ட அணை மாத ி‌ ர ி படங்கள் ஜூலை மாதம் மதகு உடைத்து ‌ரிலீஸானதுக்கு இதுவும் ஒரு காரணமாம். கந்தசாமி வெளிவந்தால்தான் பல படங்களுக்கு ‌ரிலீஸ் தேதியே முடிவு செய்யப்படும். சாமின்னாலே பிரச்சனைதான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘எத்தனையாவது காதலர் என்று கேட்கிறார்கள்… அவர்களுக்கு அது எண்ணிக்கை’ –ஸ்ருதிஹாசன் தெளிவான பதில்!

PAN இந்தியா சினிமா என்ற பாதையை வகுத்துக் கொடுத்த பாகுபலி… 10 ஆண்டுகளுக்குப் பின் ரி ரிலீஸ்!

கோடி அருவி கொட்டுதே அடி என் மேல… ரைசா வில்சனின் அழகிய க்ளிக்ஸ்!

மினி ஸ்கர்ட் உடையில் மாடர்ன் லுக்கில் ஜொலிக்கும் அதுல்யா ரவி!

அமைச்சர்களுக்காக சபாநாயகர் பேசும்போது, எனக்காக அ.தி.மு.க., வினர் பேசக்கூடாதா?' வானதி

Show comments