Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாலா வீட்டுமுன் தண்டோரா – நீதிமன்றம் உத்தரவு

பாலா வீட்டுமுன் தண்டோரா – நீதிமன்றம் உத்தரவு
, வெள்ளி, 7 ஆகஸ்ட் 2009 (19:51 IST)
நானகடவுள் படத்தின் தயா‌ரிப்பாளர் சீனிவாசன், இயக்குனர் பாலா ஆகியோ‌ரின் வீடு மற்றும் அலுவலகங்களினமுன் தண்டோரா போட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நானகடவுள் படத்தில் ஊனமு‌ற்றோரை பிச்சைக்காரர்களாக சித்த‌ரித்திருப்பதுடன் அவர்கள் வாழ தகுதியற்றவர்களாகவும் காட்சிகள் வைத்துள்ளனர். அதனால் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு ஊனமுற்றோர் நலவாழ்வு சங்கத்தைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசா‌ரித்த நீதிபதி, படத்தின் தயா‌ரிப்பாளர் சீனிவாசனும், இயக்குனர் பாலாவும் ஜூலை 1 ஆம் தேதிக்குள் பதில் மனு அளிக்க உத்தரவிட்டார்.

ஆனால் சீனிவாசனும், பாலாவும் குறிப்பிட்ட தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. சீனிவாசன் மற்றும் பாலா சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பதில் மனு தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் கேட்டனர்.

இதையடுத்து பதில் மனு அளிக்குமாறு சீனிவாசன் மற்றும் பாலா ஆகியோ‌ரின் வீடு மற்றும் அலுவலகங்களின் முன் தண்டோரா போட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் பதில் அளிக்குமாறு தணிக்கைத் துறையையும் நீதிமன்றம் கோ‌ரியிருந்தது. அவர்களும் பதிலளிக்கவில்லை. அதனால் தணிக்கை அலுவலகத்துக்கு முன்பும் தண்டோரா போட நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 7ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil