Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேட்டைக்காரன் - விஜய் ஆண்டனி மறுப்பு

வேட்டைக்காரன் - விஜய் ஆண்டனி மறுப்பு
, வெள்ளி, 17 ஜூலை 2009 (16:01 IST)
வேட்டைக்காரன்... இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு கிடைத்திருக்கும் முதல் பெ‌ரிய வாய்ப்பு. படத்தின் ஒவ்வொரு பாடலும் நாக்க முக்க அளவுக்கு ஹிட்டாக வேண்டும் என்பதற்காக இழைத்து இழைத்து டியூன் போட்டிருக்கிறார். படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள்.

படப்பிடிப்பே இன்னும் முடியாத நிலையில் வேட்டைக்காரன் பாடல் என்று இணையதளங்களில் ஒரு பாடல் வலம் வருகிறது. பாடலை டவுன்லோட் செய்ய ஆளாய் பறக்கிறார்கள் ரசிகர்கள். எப்படி பாடல் இணையதளத்தில் வெளியானது?

விஜய் ஆண்டனியிடம் கேட்டால், அது வேட்டைக்காரனில் வரும் பாடலே கிடையாது என்று சி‌ரிக்கிறார். பிறகு? கிராபிக்ஸில் பிரபலங்களின் தலையை உருட்டுவது போல், பொய்யாக ஒரு பாடலை உருவாக்கி வேட்டைக்காரன் பாடல் என்று யாரோ சில விஷமிகள் இணையதளங்களில் உலவ விட்டிருக்கிறார்கள். ஃபோக் சாங் மாதி‌ி இது ஃபேக் சாங்.

வேட்டைக்காரன் படம் தனக்கு புதிய பல வாய்ப்புகளை பெற்றுத் தரும் என உறுதியாக நம்புகிறார் விஜய் ஆண்டனி. ஆள் அம்சமாக இருப்பதால் விஜய் ஆண்டனியை நடிக்கக் கேட்டு நாலா பக்கமும் இம்சை.

கீபோர்ட்தான் எனது ஒரே முகவ‌ரி என நடிக்க மறுத்து வந்தவ‌ரிடம் சில மாதங்களாக மாற்றம். நல்ல கதை வந்தால் நடிப்பது பற்றி யோசிக்கலாம் என இறங்கி வந்திருக்கிறார். இது போதாதா? கட்டம் கட்டி பில்டிங் எழுப்பிட மாட்டார்களா நம்மவர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil