Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன செய்கிறார் எந்திரன்?

Webdunia
திங்கள், 15 ஜூன் 2009 (14:57 IST)
ர‌ஜினி படங்களிலேயே அதிக பொருட்செலவில் தயாராகும் படம் எந்திரன். இயக்கம் ஷங்கர், ஜோடி உலக அழகி ஐஸ்வர்யா ராய் என எல்லாமே ஏ கிளாஸ். பாபாவுக்கு பாபா பக்கம் என்று தனி பத்தி ஒதுக்கிய பத்த ி‌ ரிகைகள்கூட எந்திரன் பற்றி எழுத தயங்குகின்றன. ஏனிந்த பாராமுகம்?

படத்தின் தய ா‌ ரிப்பு கை மாறியதால்தான் இந்த சுணக்கம் என்கிறார்கள் இன்டஸ்ட ்‌ ரியில். படத்தைப் பற்றி நாம் ஏதாவது எழுதப்போய் அது அவர்களுக்கு உறுத்தலாக இருந்துவிட்டால் வீணாக கரண்டை கக்கத்தில் விட்டது போலாகிவிடுமே என அனைவருக்கும் சின்ன உதறல்.

தவிர சமீபத்தில் நடந்த அனைத்து சுப க ா‌ ரியங்களிலும் முதலாளாக கலந்து கொண்டார் ர‌ஜினி. படம் நடிக்கும்போது இப்படி பப்ளிக் த‌ரிசனம் தருகிறவர் அல்லவே சூப்பர் ஸ்டார் என இன்டஸ்ட‌‌ரியிலும் புருவம் உயர்த்துகிறார்கள்.

நாம் விச ா‌ ரித்ததில் பிஸியாகவே இருக்கிறார் ர‌ஜினி. கடந்த வாரத்தில் மாயாஜாலில் எந்திரன் படத்தின் சில காட்சிகளை ஷங்கர் படமாக்கியிருக்கிறார். இதற்காக பிரமாண்ட அரங்குகள் போடப்பட்டிருந்தன. இங்கு நடந்த ஷூட்டிங்கில் ர‌ஜினியும் கலந்து கொண்டிருக்கிறார்.

விரைவில் அவுட்டோர் ஷூட்டிங்கிற்காக எந்திரன் யூனிட் வெளியூர் கிளம்புகிறது. படம் முடிய இன்னும் பல மாதங்கள் ஆகும் என்பதால் அதுவரை அடக்கி வாசிக்க சொல்லியிருக்கிறாராம் ர‌ஜினி. அதுதான் இந்த மவுனம். புயலுக்குமுன் அமைதி?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மெய்யழகன் படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

அந்த பெண்தான் என்னை டார்ச்சர் செய்தார்… குற்றச்சாட்டுகளை மறுத்த ஜானி மாஸ்டர்!

பிரபாஸ் படத்தில் வில்லன், வில்லியாக சைஃப் அலிகான் & கரீனா கபூர்!

சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப் போவது இவரா?

பூஜா ஹெக்டேவுக்கு நன்றி தெரிவித்த சூர்யா 44 படக்குழு!

Show comments