பேரரசு கேட்ட ஒரு கோடி!

Webdunia
வெள்ளி, 15 மே 2009 (16:17 IST)
விஜய்யின் ஐம்பதாவது படத்தை யார் இயக்குவது என்ற குழப்பம் தொடர்கிறது.

காதலுக்கு மரியாதை படத்தை தயாரித்த சங்கிலி முருகன், விஜய்யின் ஐம்பதாவது படத்தை தயாரிக்கிறார். இயக்குனர் எஸ்.பி. ராஜ்குமார் சொன்ன கதை பிடித்துப்போக, அதையே படமாக்குவது என முடிவு செய்துள்ளனர். கதை தயார், தயாரிப்பாளர் ரெடி! இயக்குனர்...?

விஜய்க்கு திருப்பாச்சி, சிவகாசி என இரண்டு வெற்றிப் படங்களைத் தந்த பேரரசிடம் ஐம்பதாவது படத்தை இயக்கித் தரும்படி கேட்கப்பட்டது. சிவகாசி வெற்றிக்குப் பிறகு திருப்பதி, தருமபுரி, திருவண்ணாமலை என மூன்று தொடர் தோல்விகள் கொடுத்தார் பேரரசு. இறுதியாக வெளியான பழனியும் பாதி கிணறே தாண்டியது.

இந்நிலையில், விஜய் படத்தை இயக்க ஒரு கோடி சம்பளம் கேட்டு திகைக்க வைத்துள்ளார் பேரரசு. முப்பது, நாற்பது லட்சங்களில் முடித்துவிடலாம் என்றிருந்தவர்களுக்கு அதிர்ச்சி!

கதை தயாராக இருப்பதால் தானே படத்தை இயக்கினால் என்ன என்று விஜய்யின் த‌ந்த ை எஸ்.ஏ. சந்திரசேகரன் தூண்டில் போட்டிருக்கிறார். சமீபத்திய அவரது சினிமா ரிக்கார்டுகள் சரியில்லை என்பதால் ஒரு கோடியா, எஸ்.ஏ.சி.யா என்ற குழப்பத்தில் உள்ளது தயாரிப்பாளர் தரப்பு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நிம்மதியாக உறங்க முடியவில்லை.. துபாயில் சிக்கி கொண்ட பிரபல நடிகையின் இன்ஸ்டா பதிவு..!

சிவகார்த்திகேயன் அளவுக்கு எங்களிடம் பணம் இல்லை.. நடிகர் ஆரி ஆதங்கம்..!

சூர்யாவின் கையில் உள்ள கைக்குழந்தை யார்? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்..!

தாய் கிழவி' வசூல் வேட்டை: இரண்டாம் நாளில் அதிரடி முன்னேற்றம்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: துபாயில் சிக்கிய நடிகர் அஜித்துக்கு என்ன ஆச்சு? ரசிகர்கள் கவலை..!

Show comments