சரவணனின் "பிஞ்சு மனசு"

Webdunia
சனி, 28 பிப்ரவரி 2009 (15:21 IST)
முரட்டுத்தனமான கேரக்டர்களில் நடித்துவந்த சரணவன் 'பிஞ்சு மனசு' படத்தில் மென்மையும், இனிமையும் கலந்த குடும்பத் தலைவராக நடிக்கிறார். டி. ஜெய்ராம் படத்தை இயக்குகிறார்.

கல்லூரியில் பியூன் வேலை பார்க்கும் சரவணனுக்கும், அதே கல்லூரிப் பேராசிரியையாக பணிபுரியும் அமைச்சர் ஒருவரின் மகளுக்கும் காதல். அந்தக் காதலால் ஏற்படும் பிரச்சனைகள், போராட்டங்கள் என்ன என்பதே கதை.

ஹீரோயினாக தர்ஷா நடிக்கிறார்.சரவணன்-தர்ஷா தம்பதிகளின் குழ‌ந்தைகயாக மாஸ்டர் வருண் நடிக்கிறார். ஒரு குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும்? எப்படி வளர்க்கக்கூடாது? என்பதை இயக்குனர் ஜெய்ராம் இப்படத்தின் மையக்கருவாக வைத்து படமாக்கி வருகிறார்.

ஆர்த்தி-கணேஷ் ஜோடி காமெடிக்கு கங்கணம் கட்டியுள்ளனர். ஸ்ரீ இளங்கோவன் பிலிம்ஸ் சார்பில் எம். இளங்கோவன் தயாரிக்கிறார்.

பருத்தி வீரன், வீரமும் ஈரமும் போன்ற படங்களில் அடாவடி செய்த சரவணன் பிஞ்சு மனசு மூலம் தாய்க்குலத்தின் பேராதரவை பெற முயற்சிக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

அவங்க பண்ண வைக்கிறாங்க.. உண்மை இல்ல.. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொளக்கும் நந்தினி

இயக்குனர் பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

Show comments